வரதட்சணை ஒரு வன் கொடுமை என்பதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள்.(பணத்திமிர்,பேராசை கொண்டவர்களைத் தவிர).இந்த வரதட்சணை எனும் கொடுமையின் காரணமாக,இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும்,பெண்கள் அவதிக்குள்ளாக்கப்பட்டும்,பரிதாபகரமான முறையில் மரணத்தை தழுவும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.சட்டம் புத்தக கட்டுக்களிலும்,ஆள்வோர் மற்றும் பணத்திமிர் கொண்டோரின் சட்டைப்பையில் படுத்து தூங்குகிறது.
இந்த அவலம் எல்லா மத மக்களிடமும்,சாதிகளிலும் புரையோடி,இன்று வரதட்சணை கொடுப்பது ஒரு பேஷன் போன்று ஆகிவிட்டது. இந்த அவலங்களுக்கெல்லாம் யார் காரணம்?இந்த வரதட்சணையால் வரும் கேடு என்ன?அதற்கு இஸ்லாம் என்ன தீர்வு சொல்கிறது? என இன்ஷா அல்லாஹ் அலசுவோம்.
--------------------------------------------------
இனி
இப்பழக்கம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் இது அவாளின் அன்பளிப்பு. இது ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து முடிவில் தமிழக முஸ்லிம்களை கடிக்க வந்திருக்கும் நச்சுவரம். இவ்வரதட்சணை கொடுமை எய்ட்ஸ் நோயாகப் பரவி ஜாதி மத பேதமின்றி எல்லோரையும் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
எப்படி இந்த இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணையை வரவேற்று ஏற்றுக்கொண்டது? அதுவும் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த அன்னிய மதத்தவரின் கலாச்சாரமான இவ்வரதட்சணை எப்படி நுழைந்தது?
அன்னிய மதத்தவரின் கலாச்சாரத்தை எந்த ஒரு முஸ்லிம் பின்பற்றுகிறாரோ அவர் அந்த மதத்தைச் சார்ந்தவரே (எம்மைச் சார்ந்தவரல்லர்) என்ற நபி(ஸல்) அவர்களின் அமுத மொழியை எச்சரிக்கையை அறியாதவர்களாக அல்லது அறிந்தும் அலட்சியப்படுத்தியவர்களாக அழிவைத் தரும் இந்த அனாச்சாரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம். எதற்காக யாருடைய நலனுக்காக நாம் சிந்திக்க வேண்டாமா?
http://peacetrain1.blogspot.com/2009/03/1.html
Thursday, January 20, 2011
Tuesday, January 4, 2011
டார்ச்சர் தட்சணை
பவுன் கணக்கில் கொட்டப்படும் நகையோடு
பெண் திருமணமாவது – தங்க தட்சணை!
பணம் வாங்குவது, திருமணச்செலவு முழுமையும்
பெண் வீட்டார் செய்வது – ரொக்க தட்சணை!
வரதட்சணைப் பணத்தை வைத்து வேலை வாங்குவது,
வளைகுடா நாடுகளுக்குச்செல்வது –வேலை தட்சணை!
வீடு, வாகனங்கள், இதர சொத்துக்கள் பெறுவது – சொத்து தட்சணை!
ஈத், தீபாவளி, இதர நாட்களை வைத்து பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது –பண்டிகை தட்சிணை!
முக்கியமாக பிரசவ செலவை மாமனார் வீட்டிற்குத்
தள்ளிவிடுவது – பிரசவ தட்சணை!
குழந்தை பிறந்தால் அதற்கும் காது குத்து, மொட்டையடிப்பது என்ற பெயரில் பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது – குழந்தை தட்சணை!
மனைவியை வீட்டுவேலைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது, அதில் பங்கேற்காமல் இருப்பது – வேலைக்காரி தட்சணை!
மனைவியை இருட்டுக்கு மட்டும் இலவசமாய் பயன்படும் பொருளாய் பார்ப்பது – தாசி தட்சணை!
எந்த முக்கியமான விசயங்களிலும் மனைவியோடு கலந்தாலோசிக்காமல் இருப்பது – அடிமை தட்சணை!
மனைவியை அடிப்பது, சித்திரவதை செய்வது – டார்ச்சர் தட்சணை!
……… மொத்தத்தில் முடிவு பெறாது இந்த வரதட்சணை! ................
http://saynotodowry.blogspot.com/
Subscribe to:
Posts (Atom)