வரதட்சணை ஒரு வன் கொடுமை என்பதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள்.(பணத்திமிர்,பேராசை கொண்டவர்களைத் தவிர).இந்த வரதட்சணை எனும் கொடுமையின் காரணமாக,இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும்,பெண்கள் அவதிக்குள்ளாக்கப்பட்டும்,பரிதாபகரமான முறையில் மரணத்தை தழுவும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.சட்டம் புத்தக கட்டுக்களிலும்,ஆள்வோர் மற்றும் பணத்திமிர் கொண்டோரின் சட்டைப்பையில் படுத்து தூங்குகிறது.
இந்த அவலம் எல்லா மத மக்களிடமும்,சாதிகளிலும் புரையோடி,இன்று வரதட்சணை கொடுப்பது ஒரு பேஷன் போன்று ஆகிவிட்டது. இந்த அவலங்களுக்கெல்லாம் யார் காரணம்?இந்த வரதட்சணையால் வரும் கேடு என்ன?அதற்கு இஸ்லாம் என்ன தீர்வு சொல்கிறது? என இன்ஷா அல்லாஹ் அலசுவோம்.
--------------------------------------------------
இனி
இப்பழக்கம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் இது அவாளின் அன்பளிப்பு. இது ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து முடிவில் தமிழக முஸ்லிம்களை கடிக்க வந்திருக்கும் நச்சுவரம். இவ்வரதட்சணை கொடுமை எய்ட்ஸ் நோயாகப் பரவி ஜாதி மத பேதமின்றி எல்லோரையும் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
எப்படி இந்த இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணையை வரவேற்று ஏற்றுக்கொண்டது? அதுவும் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த அன்னிய மதத்தவரின் கலாச்சாரமான இவ்வரதட்சணை எப்படி நுழைந்தது?
அன்னிய மதத்தவரின் கலாச்சாரத்தை எந்த ஒரு முஸ்லிம் பின்பற்றுகிறாரோ அவர் அந்த மதத்தைச் சார்ந்தவரே (எம்மைச் சார்ந்தவரல்லர்) என்ற நபி(ஸல்) அவர்களின் அமுத மொழியை எச்சரிக்கையை அறியாதவர்களாக அல்லது அறிந்தும் அலட்சியப்படுத்தியவர்களாக அழிவைத் தரும் இந்த அனாச்சாரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம். எதற்காக யாருடைய நலனுக்காக நாம் சிந்திக்க வேண்டாமா?
http://peacetrain1.blogspot.com/2009/03/1.html
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீங்கள் யாரன்று தெரியாவிட்டாலும் பரவா இல்லை உங்கள் தளத்தில் வந்து பின்னூட்டம் இடுபவர்களுக்கு பதில் அளித்தால்தான் வாசகர்கள் கூடுவதற்கு சந்தர்ப்பம் இருக்கும் என நினைக்கிறேன்.நன்றி !
அதற்காக எனக்கு பதில் சொல்லனும்னு நிர்பந்தம் இல்லை என்னுடைய ஆதங்கம் இதுபோன்ற சமூக சிந்தனையுள்ள கருத்தை எல்லோரும் படிக்கணும்னு ஒரு நப்பாசையில்தான் சொல்லுகிறேன்.
நன்றி அந்நியன் அவர்களே.உங்கள் கருத்து மிக சரி.ஊக்கப்படுத்துவதற்கு நன்றி
ReplyDeleteமாஷா அல்லாஹ்..நல்ல வலைப்பூ மற்றும் பதிவுகள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteவரதட்சணை கொடுப்பதையும் கேட்பதையும் முதலில் பணக்காரர்கள் நிறுத்த வேண்டும். தட்சணை கேட்பது கொடுப்பது கவுரமாக அவர்கள் நினைப்பது வேதனைக்குரியதுதான். கேட்ட பிறகு கொடுக்கும்போதுதானே அன்பளிப்பின் பெயர் கூட வரதட்சணை என்றாகிறது. அதனால் கேட்பதை நிறுத்தினால் கொடுப்பது தன்னால் மறைந்துவிடும் என்பது என் கருத்து.