Friday, February 4, 2011

கல்யாணமாம் கல்யாணம்..

முன்பெல்லாம் ரமளான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு (அதென்ன ஆறு நோன்பு அய்யாறு நோன்பு?) முடிந்தபின் அதிரை களைகட்டும். பெரும்பாலும் வளைகுடாவில் பணிபுரிந்து பணம் ஈட்டிய அதிரைவாசிகள் நோன்புப் பெருநாளைக்கு ஊர் வருவது மட்டுமின்றி, அவர்களின் வருகையையொட்டி ஆங்காங்கே நடைபெற்ற திருமணங்கள்தான் இவற்றிற்குக் காரணம். ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்ட திருமணங்களும் நடைபெற்றதுண்டு.

இந்தியா உலகமயமாக்கலைத் தேர்ந்தெடுத்தபின் அதிரைவாசிகளின் வாழ்க்கையிலும் எண்ணற்ற மாற்றங்கள். பொருளீட்டுவதற்கு வளைகுடாவை மட்டுமே நம்பியிருந்த நம்மவர்கள் மேலை நாடுகளை நாட ஆரம்பித்தனர். பத்தாம் வகுப்பு தவறினால் அல்லது பன்னிரண்டாம் வகுப்பு தேறினால் கடவுச்சீட்டுக்குக்காக காத்திருந்தவர்கள் இப்போது கல்லூரிகளின் அட்மிஷனுக்காகவும் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர். மேற்படிப்பு படிப்பதற்குத் தோதுவாக தங்கள் குழந்தைகளின் கல்வித்தரம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மழலையர் வகுப்பு முதலே சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள கல்விக்கூடங்களில் சேர்க்கின்றனர். குழந்தைகளின் கல்விக்காகவே அதிரையை விட்டு சென்னை போன்ற நகரங்களில் குடியேறுகின்றனர். (கல்விக்கு நம் மக்கள் அளிக்கும் முக்கியத்துவம் மகிழ்வளிக்கிறது.)
பொதுவாக கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல், மே மாதங்கள் விடுமுறை என்பதால் சென்னை வெப்பத்திலிருந்து தப்பிக்க அதிரை வருகின்றனர். அதிரைவாசிகள் பெரும்பான்மையோர் ஊரில் இருப்பார்கள் என்பதால் நோன்புப் பெருநாளுக்குப் பிறகு நடைபெற்று வந்த திருமணங்கள் இப்போது ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகின்றன. ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள், இரண்டு மூன்று வேளை விருந்து என அதிரை அக்னி வெயிலிலும் களை கட்டியிருக்கிறது. இதுவரை 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இரவு வேளைகளில் மட்டுமே நடைபெற்று வந்த திருமணங்கள் காலை, அஸருக்குப்பின், மக்ரிபுக்குப் பின், இஷாவுக்குப் பின் என்று பல நேரங்களில் நடைபெறுவதால் கல்யாண வரவேற்புக்குச் செல்பவர்களும் நடைபயிற்சி செய்வது போல் வரவேற்புகளில் கலந்து கொள்கின்றனர். முன்பு காணப்பட்ட குதிரை சவாரி, பேண்டு வாத்தியங்கள், பைத்து சபா, கக்கிலி வட்டம் போன்றவை (ஒருசில பகுதிகளில் நடைபெற்றாலும்) பெரும்பாலும் குறைந்துவிட்டது. அதிகமான திருமணங்கள் பள்ளிகளிலேயே நடைபெறுகின்றன. தேவையற்ற பல வழக்கங்கள் குறைந்துவிட்டது மகிழ்ச்சியே.
எல்லாம் சரி, வரதட்சணை?

ஆக்கம்: அபூசுஹைமா

4 comments:

  1. //எல்லாம் சரி, வரதட்சணை?//
    அதானே..........

    அத சொல்லாம விட்டுட்டீக ;)

    ReplyDelete
  2. //முன்பு காணப்பட்ட குதிரை சவாரி, பேண்டு வாத்தியங்கள், பைத்து சபா, கக்கிலி வட்டம் போன்றவை (ஒருசில பகுதிகளில் நடைபெற்றாலும்) பெரும்பாலும் குறைந்துவிட்டது. அதிகமான திருமணங்கள் பள்ளிகளிலேயே நடைபெறுகின்றன. தேவையற்ற பல வழக்கங்கள் குறைந்துவிட்டது மகிழ்ச்சியே.
    எல்லாம் சரி, வரதட்சணை? //

    வரதட்ச்சனை வாங்குவதே ஆடம்பர செலவுக்குத்தான்.

    கிழக்கே உதிக்கும் சூரியன் எப்பொழுது மேற்கு உதிக்கிறதோ அன்றுதான் வரதட்சணை கொடுமை நிற்கும் அதுவரை அவை காலம் சுழழுவது போல் சுற்றிக் கொண்டுதான் இருக்கும்.

    உங்களது ஆக்கங்கள் மனதிற்கு திருப்தி அளிக்கின்றது.

    ReplyDelete
  3. //முன்பு காணப்பட்ட குதிரை சவாரி, பேண்டு வாத்தியங்கள், பைத்து சபா, கக்கிலி வட்டம் போன்றவை (ஒருசில பகுதிகளில் நடைபெற்றாலும்) பெரும்பாலும் குறைந்துவிட்டது. அதிகமான திருமணங்கள் பள்ளிகளிலேயே நடைபெறுகின்றன. தேவையற்ற பல வழக்கங்கள் குறைந்துவிட்டது மகிழ்ச்சியே.
    எல்லாம் சரி, வரதட்சணை?
    // இதுவும் இப்பொழுது குறைந்து வருவது மிகவும் மகிழ்ச்சிக்குறிய விடயம்.

    ReplyDelete
  4. இதுக்கே அசந்துட்டா எப்படி? எங்கள் நண்பரின் அக்கா பெண்ணுக்கு திருமணம் நடக்கும்போது (மதுரை அருகில்) மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை வேண்டாமென்று சொன்ன காரணத்துக்காக, திருமணத்தை இங்கே நடத்தக் கூடாது என்றும், மணமகன் மேல் அபராதமும் வழங்கி அதிர வைத்தது ஒரு மஸ்ஜித். எப்பூடி??

    ReplyDelete